அன்னையைத் தெய்வமாக ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பல இருக்கின்றன. அவற்றைக் கவனமாகக் கடைப்பிடிக்கின்றவர்களுடைய வாழ்க்கை, தெய்வ மணம் நிறைந்து மகிழ்ச்சிகரமாகவும், சுபிட்சமாகவும் அமைவதைக் கண்கூடாகக் காணலாம்.
‘அன்னையை எப்படி வழிபடுவது? அன்னையை வழிபடுவதற்கு ஏதேனும் விதிமுறைகள் இருக்கின்றனவா? எத்தகைய விதிகளைக் கடைப்பிடித்தால் அன்னையின் அருளை எளிதில் பெறவும், விரும்பியதை அடையவும், சிக்கல்களிலிருந்து விடுபடவும் முடியும்’ எனக் கேட்டு ‘அமுதசுரபி’ வாசகர்கள் பலர் எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். எனக்குக் கடிதம் எழுதாத பல வாசகர்கள் மனதிலும் இதே போன்ற வினாக்கள் தோன்றி இருக்கக்கூடும் என நினைக்கிறேன்.
அன்னையின் பெருமைகளை, அளப்பரிய அருட்சக்தியை அறிந்து கொண்ட வாசகர்கள், அன்னையை வணங்குவதற்கான வழிமுறைகளையும் அறிந்துகொள்ள வேண்டியது மிக முக்கியமாகும்.
ஞானிகளும், தபஸ்விகளும் பரம்பொருளை அடைந்து, அனுபவிப்பதையே குறிக்கோளாகக் கொண்டவர்கள். மக்கள் இவர்களை நாடிச் செல்வதை நாம் அறிவோம். வாழ்க்கையில் அல்லலுறும் மக்கள் இவர்களை நாடிச் செல்வதற்குக் காரணம், இவர்களிடம் உள்ள ஆன்மீகச் சக்தியால் தம்மை வருத்தும் பிரச்சினைகளுக்கு விடிவு ஏற்படும் என்பதுதான்.
நான் அன்று வழக்கம்போல ஸ்ரீ அரவிந்தாசிரமத்துக்குப் போய்விட்டு வீட்டுக்குப் பஸ்ஸில் திரும்பிக்கொண்டிருந்தேன். அதே பஸ்ஸில் நண்பர் ஒருவரைப் பார்த்தேன். அவரும் புதுச்சேரிக்குப் போய்விட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவர் முகம் மிகவும் சோர்ந்துபோயிருப்பதைக் கவனித்த நான், ஏதோ ஒரு கவலை அவர் நெஞ்சை அரித்துக்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன். ‘என்ன வேலையாகப் புதுச்சேரிக்குப் போய்விட்டு வருகிறீர்கள்?’ என்று கேட்டேன்.
ஜிப்மர் மருத்துவ விடுதிக்குப் போய் வருவதாகவும், மூன்று வாரங்களுக்கு முன்னால் அங்கே சேர்க்கப்பட்ட தம் தம்பியைப் பார்த்துவிட்டு வருவதாகவும் சொன்னார் அவர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டையபுரத்துக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பர் வேலுச்சாமி. அவர் ஓர் ‘அமுதசுரபி’வாசகர். விவசாயி; அவருக்கு 40 ஏக்கர் நிலமும், சொந்த வீடும் உள்ளன. மிகுந்த செல்வாக்குடன் வாழ்ந்த அவருடைய தகப்பனார் நிறையக் கடன்களை வைத்துவிட்டுக் காலமாகிவிட்டார். நல்ல திறமையும், கடுமையான உழைப்பும் நிறைந்த வேலுச்சாமி, தம் தகப்பனார் வைத்துவிட்டுப்போன கடன்களை விரைவில் அடைத்ததோடு, பழைய வீட்டைத் திருத்திப் புதுக்கிக் கட்டினார். நிலங்களை நன்கு பண்படுத்தி, முன்னிலும் பன்மடங்கு விளைந்துகொழிக்கும் பொன் சொரியும் பூமியாக்கினார்.
தமிழிலக்கிய உலகில் திரு. வாசவன் ஒரு பிரபல எழுத்தாளராக விளங்கிப் பொலிகின்றார். மூத்த தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். நாற்பது வருடங்களுக்கும் மேலாக ஏராளமான சிறு கதைகள், நாடகங்கள், புதினங்கள், தொடர்கதைகள், கட்டுரைகள் ஆகிய படைப்புகளின் மூலம் தமிழ் வாசகர்களிடையே நிரந்தர இடத்தைப் பெற்றிருப்பவர் அவர். ‘அமுதசுரபி'யில் வெளிவரும் கட்டுரைகளைப் படித்துவரும் வாசகர்களில் வாசவனும் ஒருவர். ஒவ்வொரு கட்டுரையையும் ‘அமுதசுரபி'க்குப் பிரசுரத்துக்கு அனுப்புவதற்குமுன், நான் அதை அவரிடம் கொடுத்துப் படிக்கச்செய்வது என் வழக்கமாக இருந்துவருகின்றது.
‘நமக்க ஏற்படும் துன்பங்கள் யாவும் நம்முடைய செயல்களால் ஏற்படுகின்றன’ என்பதை இதற்குமுன் எழுதியுள்ள கட்டுரைகளில் குறிப்பிட்டு உள்ளேன். துன்பங்களை விலக்குவதற்கான ஒரே வழி, அந்தத் துன்பங்களை உருவாக்கும் செயல்களை விலக்குவதுதான். அதற்குத் தேவையானவை இரண்டு :
‘அமுதசுரபி’வாசகர் என்று தம்மை அறிமுகம் செய்துகொண்டு எனக்குக் கடிதம் எழுதிய அந்த அன்பர், 28 வயது நிறைந்த ஒரு பொறியியல் பட்டதாரி. படிப்பை முடித்த பிறகு ஆறு ஆண்டு காலமாக வேலை பார்த்து வருகிறார். இந்தக் குறுகிய காலத்துக்குள் நான்கு நிறுவனங்களில் வேலை செய்துவிட்டு ஐந்தாவதாக ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். ஏறக்குறைய 900 ரூபாய் சம்பளமாகக் கிடைத்துவந்தது.
அந்தக் கடிதம் கோவையிலிருந்து வந்திருந்தது. அதை ‘அமுதசுரபி’ வாசகர் ஒருவர் எழுதி இருந்தார். ‘அன்னையைப் பற்றிய கட்டுரைகளை ஆழ்ந்து படித்துவரும் அன்பன்’என்று தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட அவர், தம் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் ஒரு மிகப்பெரிய சோதனையையும், அதன் காரணமாக எழுந்துள்ள வேதனையையும் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, அவற்றில் இருந்து மீள்வதற்கு அன்னையின் அருளை நாடுவதாகவும் எழுதியிருந்தார். அதற்கு முன்னால் அவர் தம் வாழ்க்கையைப் பற்றிய சிறுகுறிப்பு ஒன்றையும் தந்திருந்தார். எஸ்.எஸ்.எல்.ஸி.யோடு தம் படிப்பை முடித்துக்கொண்டு, வேலைக்குப் போக ஆரம்பித்த அவர், 15 ஆண்டு காலம் பல ஊர்களில் வாழ்ந்தார்.