‘அமுதசுரபி'யில் அன்னையைப் பற்றிய கட்டுரையில் 1980ஆம் ஆண்டிலிருந்து மாதந்தோறும் தொடர்ந்து வருவதை வாசகர்கள் அறிவார்கள். தொடக்கக் காலத்தில், ‘பூக்களும் அவை சொல்கின்ற செய்திகளும்’என்ற கட்டுரை வெளியாயிற்று. ‘பூக்களின் முக்கியத்துவத்தையும், சிறப்பையும் உலகுக்குத் தெளிவாக எடுத்துச் சொன்னவர் அன்னை’என்பதைக் குறிப்பிட்ட அந்தக் கட்டுரை, ‘நம் வாழ்க்கையில் நன்மைகளும், தீமைகளும் கலந்துள்ளன. தீமைகளைத் தவிர்க்கவும், நன்மைகளைப் பெருக்கிக்கொள்ளவும் பூக்கள் பெருந்துணையாக அமைந்துள்ளன. பூக்களின் துணையால் நாம் நம் வாழ்க்கையைச் செப்பனிட்டுக்கொள்ளலாம்.