வேத காலத்திலிருந்து இன்றுவரை நம் வாழ்க்கை தெய்வீக நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது. மூவாயிரம் ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாகக் கூறப்படும் திருமூலர் வழியில் வந்த தமிழ் மக்களின் வாழ்க்கையில், ஆன்மிகமே முதல் இடத்தைப் பெற்று வருகின்றது. சிவன், விஷ்ணு முதலிய கடவுளர்களை வழிபடும் தமிழர்கள் சைவ, வைணவ மரபுகளை உருவாக்கி அவற்றை வளர்ப்பதற்காகப் பல்லாயிரக்கணக்கான ஆலயங்களை எழுப்பி இருக்கின்றார்கள். “எவ்வளவு உயர்ந்தவர்களாக இருப்பினும்-ஆண்டவனின் அவதாரமாகவே இருப்பினும் கூட-மனிதர்களுக்குக் கோயில் எடுக்கும் வழக்கம் தமிழர்களிடம் இல்லை” என்று டாக்டர் வாசவன் கூறி இருக்கும் கருத்து, இங்கு சிந்திக்கற்பாலது.
“உள்ளங்கை ஜலம், வில்ப பத்ரம், ஒரு பழம் இவற்றுள் எதையேனும் ஒன்றை எனக்குக் கொடுத்தால் போதும். உண்மையான பக்தியுடன் நீ சமர்ப்பிக்கும் ஒவ்வொரு சிறிய பொருளும் உன் முழுச் சொத்துகளையும் சமர்ப்பிப்பதற்கு ஒப்பாகும்!” என்று கூறுகின்ற பரம்பொருளாகிய இறைவன், மேலும் சொல்வார்: “அது போன்ற பக்தியுடன் நீ உன் இஷ்ட தெய்வத்திற்குச் செய்யும் சமர்ப்பணத்தையும் நானே பெற்றுக் கொள்கின்றேன். அது மட்டுமன்று; நீ எந்தத் தெய்வத்திற்கு உன்னை உண்மையுடன் சமர்ப்பணம் செய்தாலும் அதை ஏற்றுக் கொள்வதும் நானே”.
வடஇந்தியாவில் வாழ்ந்து வரும் ‘அமுதசுரபி’ வாசகர் ஒருவர் எனக்குக் கடிதம் எழுதி இருந்தார். அவர் அதில் குறிப்பிட்டு இருந்தார்: “நீங்கள் ‘அமுதசுரபி’யில் எழுதி வரும் அன்னையைப் பற்றிய கட்டுரைகளைக் கடந்த நான்கு ஆண்டுகளாக நானும், என் கணவரும் தவறாமல் படித்து வருகின்றோம். அதன் காரணமாக நாங்கள் அன்னையின் பக்தர்களாகிவிட்டோம்”.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் சுவாமிநாதன். அவருடைய தந்தைக்கு இராணுவத்தில் உத்தியோகம். அவருக்கு வடநாட்டில் வாசம். சுவாமிநாதன் இங்கே தம் மாமாவின் வீட்டில் தங்கிப் படித்து வந்தார். அவர் படிப்பில் சூடிகையானவர். பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு கல்லூரிக்குச் சென்றார். நிலை அடியோடு மாறிப் போயிற்று. அவருக்குக் கல்வியில் கவனம் செல்லவில்லை. படித்தனவெல்லாம் மறந்து போயின. பிறகு பரீட்சையில் தேறுவது எப்படி? திரும்பத்திரும்பப் பரீட்சை எழுதினார். திரும்பத்திரும்பத் தோல்வியே கண்டார்.
‘அமுதசுரபி’ வாசகர்கள் பாக்கியசாலிகள். அவர்கள் அன்னையின் அருள் அமுதைப் பருகி, விதியின் சோதனையிலிருந்தும், வேதனையிலிருந்தும் விடுபட்டு நன்மைகள் பலவற்றை நாளும் பெற்று இன்புற்று வருகின்றார்கள். அத்தகைய அன்பர்கள் சிலரின் கடிதங்களை, ஏராளமான நலன்களைப் பெற்றேயாக வேண்டிய மற்றைய வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.
கீழ்க்கண்ட கடிதத்தைச் சென்னையிலிருந்து ஒரு பெண் வாசகர் எழுதி இருந்தார்.
‘அமுதசுரபி’ வாசக அன்பர் ஒருவர் அக்டோபர் 84-இல் ஒரு கடிதம் எழுதி இருந்தார். மணிமணியான கையெழுத்து. முழுமையான முகவரியைக் கொடுத்திருந்தார். அவர் ஒரு கிராமவாசி.
‘அமுதசுரபி’ ஆசிரியர் திரு. விக்கிரமன் எப்பொழுதும் பம்பரமாகச் சுழன்று கொண்டு இருப்பவர். பத்திரிகைப் பணி என்றும், எழுத்தாளர் சங்கப் பணி என்றும், ஏராளமான நண்பர்களுக்குப் பல வகைகளிலும் உள்ளன்போடு உதவும் நட்புப் பணி என்றும், படைப்புப் பணி என்றும், ஓய்வில்லாத இலக்கியச் சொற்பெருக்குப் பணி என்றும் நாளெல்லாம் தன்னைப் பணிகளுக்குப் பங்கு போட்டுக் கொடுத்துக் கொண்டு இருப்பவர் திரு. விக்கிரமன்.