Skip to main content
Karmayogi

Main navigation

  • Home
User account menu
  • Log in

20. ஆங்கிலப் பரீட்சை

நான் பள்ளியில் ஆசிரியராக இருந்து, அதை விட்டுவிட்டு விவசாயத்தையும், அன்னையின் சேவையையும் முழுமையாக ஏற்றுக்கொண்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகின்றன. நான் ஆசிரியப் பணியைச் செய்த கடைசி நேர அனுபவத்தில், அன்னையின் அருள் ஓர் ஆர்வமுள்ள மாணவனின் வாழ்வில் வெளிப்பட்டதை இப்பொழுது கூறுகின்றேன்.

19. தரிசனமும் தகவல்களும்

‘விசேஷமான நாள்களில் தவறாது கோயிலுக்குப் போக வேண்டும்’ என்பது நம் நாட்டு வழக்கம். ‘வெள்ளிக்கிழமைகளில் கோயிலுக்குப் போவது மிகவும் நல்லது’என்று கருதப்படுகின்றது. ‘ஒவ்வொருவரும் தம் பிறந்த நாள் அன்று கோயிலுக்குச் செல்ல வேண்டும்’ என்று பெரியவர்கள் கூறுவார்கள். இந்த நாள்களில் சுவாமிக்கு அர்ச்சனை செய்வது நம் வழக்கம். பூஜா காலங்களில் அர்ச்சகர் பூஜையை முடித்துவிட்டு, கோயிலுக்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு விபூதி, குங்குமம், தீர்த்தம், தளம் முதலிய பிரசாதங்களை வழங்குவார். இவை யாவும் நம் மரபில் வந்தவை.

18. ஓர் அமெரிக்க அன்பரின் அனுபவம்

அன்னையைப் பற்றி ஓர் அமெரிக்க அன்பர் எனக்கு ஒரு குறிப்பை எழுதி இருந்தார். அது அவருடைய சொந்த அநுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. அன்னையின் அன்பர்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பத்தால், அந்த அன்பரின் குறிப்பை அப்படியே தருகின்றேன்.

‘நான் கல்லூரிப் படிப்பை 1976இல் முடித்துக்கொண்டேன். அமெரிக்காவில் வாழும் அன்னையின் பக்தர்கள் சிலர் இணைந்து, அன்னை, ஸ்ரீ அரவிந்தர் கருத்துகளின் அடிப்படையில் தம் சொந்த வாழ்க்கையையும், தொழிலையும் நடத்தி வந்தார்கள். நான் அவர்களோடு மூன்று ஆண்டுகளைக் கழித்த பிறகு, அவர்களை விட்டு விலகிச் சென்று சொந்தத்தில் தொழில் ஒன்றைத் தொடங்கினேன்.

17. வீடும் விடிவும்

அந்த அன்பர் அரக்கோணத்தைச் சேர்ந்தவர். அவர் அரக்கோணத்தின் அருகில் உள்ள சிற்றூரில் அஞ்சல் அலுவலகம் ஒன்றில் துணை அலுவலராகப் பணியாற்றி வருகிறார். அவருக்குத் திருமணமாகிவிட்டது. அவர் மனைவி ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். அன்பரின் சொந்த வீட்டில் அவரும், அவர் மனைவியும், குழந்தைகளும், அவர் தாயாரும், தங்கைகளும் ஒன்றாக வசித்து வந்தார்கள்.

16. வாய்ப்பும் வேதனையும்

அன்பர்கள் இவ்வாறு அடிக்கடி கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்: ‘நான் அன்னையிடம் எதைப் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டாலும், அது கிடைத்துவிடுகிறது. வேறு சில சமயங்களில் நான் கேட்டது கிடைக்கக் காலதாமதமும் ஆகிறது. இவற்றைத் தவிர எனக்கு வேறோர் அநுபவமும் ஏற்பட்டிருக்கிறது. நான் கோராத அல்லது நினைத்துக்கூடப் பார்க்காத சிலவற்றையும் அன்னை எனக்கு வழங்கியுள்ளார்'.

15. அன்னையும் அன்பர்களும்

அவர் பாரத ஸ்டேட் பாங்கில் குமாஸ்தாவாகப் பணியாற்றி வரும் ஓர் ‘அமுதசுரபி’வாசகர்; திருமணமாகாத பெண். அந்தக் குடும்பத்தில் அவர் மூன்றாவதாகப் பிறந்தவர். மூத்தவராக ஓர் அண்ணன், ஓர் அக்காள். அவருக்குப் பிறகு அந்தப் பெண். இவருக்குப் பிறகு ஓர் தங்கை. ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்துக்கு உள்ள எல்லாச் சோதனைகளும், வேதனைகளும் அக்குடும்பத்தில் குறைவில்லாமல் நிறைந்திருந்தன.

14. ஒரு விவசாயியின் அனுபவம்

அவர் ஒரு சிறு விவசாயி; நடுத்தர வயதுக்காரர். ஆறு ஏக்கர் புன்செய் நிலம்தான் அவருக்கு இருந்த விளைநிலம். ஆனாலும் அவர் ஊரில் முக்கிய புள்ளிகளில் ஒருவராக இருந்தார். அரசியலிலும் அவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. கிராமப்புறங்களில் செயல்படுத்தப்படுகின்ற அரசாங்கத் திட்டங்களுக்கு அங்குள்ள பிரமுகர்களின் ஆதரவு மிகவும் தேவைப்படும். அந்த விவசாயியின் ஆதரவு இல்லாமல் எந்த ஓர் அரசுத் திட்டமும் அந்த ஊரில் தலை நீட்ட முடியாது. அரசு வகுத்த பல திட்டங்களின் விளைவாக அவருடைய கிராமத்திலும் பல வசதிகள் பெருகின. கல்வி, சாலை, மின்சாரம், வங்கியின் உதவி, கூட்டுறவுச் சங்கம் போன்றவை அவற்றில் அடங்கும்.

13. கண்ணொளி

அவர் என் இனிய நண்பர். அன்னையின் நெடுநாளைய பக்தர். விவசாயம் அவருடைய தொழில்.

அன்றொரு நாள் நான் ஆரோவில்லிலிருந்து வந்த நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். அச்சமயத்தில் என்னைப் பார்ப்பதற்காக வந்திருந்த அந்த நண்பர் என் அறைக்கு வெளியே காத்துக்கொண்டு இருந்திருக்கிறார். அது எனக்கு முதலில் தெரிவிக்கப்படவில்லை. எங்களுடைய பேச்சு இப்போதைக்கு முடியும் போலத் தோன்றவில்லை. அது நீண்டுகொண்டே போயிற்று. அந்த நிலையில் எனக்காக வெளியே காத்துக்கொண்டிருக்கும் அந்த நண்பரைப் பற்றிய செய்தி கிடைத்தது.

12. ஆதாரச் சுருதி

கேப்பர் மலையில் முந்திரித் தோப்புகள் ஏராளம். நான் அங்கே ஒரு தோப்பை விலைக்கு வாங்க முடிவு செய்தேன். அதைத் தொடர்ந்து முந்திரிப் பயிரைப் பற்றிய விவரங்களைச் சேகரிப்பதில் என் கவனம் தீவிரமாகத் திரும்பிற்று. என் நேரத்தில் பெரும்பகுதி அதிலேயே செலவாயிற்று. அதன் மூலம் எனக்கு அது பற்றிய புதிய புதிய செய்திகளும், புதிய புதிய எச்சரிக்கைகளும் கிடைத்துக்கொண்டே இருந்தன. எச்சரிக்கைகளில் ஒன்று: ‘தோப்பை வாங்கினால் மட்டும் போதாது. அதை நிர்வகிக்க நம்பிக்கையும், நாணயமும் மிகுந்த நபர் தேவை. இல்லாவிடில் மகசூல் முழுமையாக நம் கைக்குக் கிடைக்காது'.

11. பூர்ண யோகி ஸ்ரீ அரவிந்தர்

உலகம் என்று தோன்றியதோ அன்றே துன்பங்களும், துயர்களும் தோன்றிவிட்டன. இவற்றின் பிடியிலிருந்து விடுபடுவதற்காக உலகத் தொடர்புகளையும், பந்தங்களையும் அறுத்துக்கொண்டு, பற்றற்ற பரம்பொருளைப் பற்றிக்கொள்ளும்போது சித்திப்பது மோட்சம். மோட்சத்தை விரும்பாத யோகிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

Pagination

  • First page
  • Previous page
  • …
  • Page 64
  • Page 65
  • Page 66
  • Page 67
  • Page 68
  • Page 69
  • Page 70
  • Page 71
  • Page 72
  • …
  • Next page
  • Last page
RSS feed
Powered by Drupal