Skip to main content
Karmayogi

Main navigation

  • Home
User account menu
  • Log in

பரம்பொருள் III

கர்மயோகி

 

மதர்ஸ் ஸர்வீஸ் சொசைட்டி
5, புதுவை சிவம் தெரு
வெங்கட்ட நகர்
பாண்டிச்சேரி  605  011.

பரம்பொருள் II

கர்மயோகி

 

 

மதர்ஸ் ஸர்வீஸ் சொசைட்டி
5, புதுவை சிவம் தெரு
வெங்கட்ட நகர் விரிவாக்கம்
பாண்டிச்சேரி -   605  011.

 

V. நோய்

1. கான்சர்

அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் செய்த யோகத்தின் பலன்கள் பல. நேரடியான தெய்வீக அனுக்கிரகம் போக, தீய சக்திகளை அழித்து, உலகில் போர் இருத்தல் கூடாது என்பதற்காகவும், நோயின் மூலத்தை அழித்தும் பல வேலைகளைச் செய்திருக்கிறார்கள். ‘சூட்சும உலகில் காச நோயையும், கான்சரையும் அழித்துவிட்டோம். எனவே, அவை இனி உலகைவிட்டுப் போய்விடும்’ என அன்னை கூறி இருக்கிறார்.

6. டிரான்ஸ்பர்

உத்தியோகத்தில் மூன்று வருஷத்திற்கு ஒரு முறை மாற்றல் உண்டு என்ற சட்டம் இருந்தாலும், மாற்றல் பலர் வாழ்வில் ஒரு முக்கியமானதாக மாறி விடுகிறது. பிரமோஷன் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் மாற்றலும் பெறுவதுண்டு. ஒரு சிலருக்குத் தேவைப்பட்ட மாற்றல் கிடைப்பது முதலில் வேலை கிடைப்பதற்குச் சமமான முக்கியத்துவம் பெறுவதுண்டு.

5. பதவி உயர்வு

வேலை கிடைப்பது, திருமணம் நடப்பது போன்றவை வாழ்க்கையில் முக்கிய கட்டங்களானாலும், வேலையில் இருக்கும்பொழுது உரிய காலத்தில் பதவி உயர்வு கிடைப்பதும் வேலை கிடைப்பதைப்போல் முக்கியம் பெற்று விடுகிறது. இதிலிருந்து மேலே பதவியில் உயரும் பொழுது ‘சீனியாரிட்டி’படி தானே உரிய காலத்தில் பதவி உயர்வு வரும் என்று நிலையாகச் சொல்லமுடியாது. மேலே போகப்போக இருக்கும் பதவியின் எண்ணிக்கை குறைகிறது. எனவே, தகுதியுள்ளவர் பலர் ஒரு பதவிக்குக் காத்திருப்பதால், ‘சீனியாரிட்டி’ மட்டுமே உயர்வு பெற பல சமயம் போதாது. உயர்வு பெறப் பாஸ் செய்ய வேண்டிய பரீட்சைகள் உள்ளன. சர்வீஸ் ரிஜிஸ்டர் சுத்தமாக இருக்க வேண்டும். போதிய அனுபவம் தேவை.

4. இலட்சிய சேவை - 2

ஒரு மிஷன் பள்ளிக் கூடம். உலக மகாயுத்தம் வந்தவுடன் அதுவரை அந்தப் பள்ளிக்கு உதவியாகக் கிடைத்து வந்த வெளிநாட்டுப் பணம் நின்று விட்டது. பள்ளிக்கூடத்தை மூடவேண்டிய நிர்ப்பந்தம். தலைமை ஆசிரியர் ஏராளமாகப் படித்தவர். அவருடைய படிப்பின் சிறப்பை உணரக் கூடிய அளவுக்குக் கூட மற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்குப் படிப்பில்லை. அங்குள்ள நூலகத்திலுள்ள புத்தகத் தேர்வைப் பார்த்தவர்கள் ஆச்சரியப்படுவார்கள். ‘நான் படித்த ஒவ்வொரு புத்தகத்தையும் நூலகத்தில் வைத்தேன்’ என்றார் தலைமையாசிரியர். நிர்வாகத்திறமை சற்றும் இல்லாதவர். மிகவும் இனியவர். மாணவர்களுக்கு அவரிடம் அலாதிப் பிரியம்; பெரிய மரியாதை.

3. இலட்சிய சேவை - 1

‘அன்னையின் பக்தர்கள் அன்னையின் கோட்பாடுகளைத் தங்கள் தொழிலில் ஏற்றுக்கொண்டு, தங்கள் நிறுவனத்திற்குச் செய்யும் வேலையை உணர்வு பூர்வமான இலட்சிய சேவையாகச் செய்தால், அந்த நிறுவனம் அவரைத் தன் தலைமைப் பீடத்திற்கு உயர்த்தும்’ என்றொரு கருத்தை நான் அடிக்கடி வலியுறுத்திப் பேசுவதுண்டு.

2. அன்னை வழங்கும் அளவுகடந்த வருமானம்

அன்னையைப் பற்றி அதிகமாகக் கேள்விப்பட்டு ஆர்வத்துடன் அன்னையை ஏற்றுக்கொண்டு, பல்வேறு வகைகளில் அன்னையின் சிறப்பை அனுபவ பூர்வமாக உணர்ந்த பின்னர், ஒரு சிலர், ‘எனக்கு மிகவும் குறைந்த வருமானம். அது அதிகமாக, கண்ணுக்குத் தெரிந்த வழியொன்றும் இல்லை. என் போன்றவர்களுக்கு அன்னையின் அருள் கூட வருமானத்தை உயர்த்தப் பயன்படாது போலிருக்கிறது’ என்று குறைபட்டுக் கொள்ளும் நிலையில் உள்ளனர்.

1. தகுந்த வேலை

‘வேலையே கிடைக்கவில்லை’ என்ற நிலையைவிட ‘திறமைக்குத் தகுந்த வேலை கிடைக்காமல் ஏழு, எட்டு ஆண்டுகளாகச் சிறிய வேலையில் இருக்கிறேன். இதை மாற்ற முடியாதுபோல் தோன்றுகிறது’ என்பது கவலைக்கிடமான செய்தி. 1932 முதல் 1939 வரை உலகெங்கும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி இருந்த நேரத்தில், உயர்ந்த தகுதி படைத்தவர்களும், குறைந்த தகுதி தேவைப்பட்ட வேலைகளைச் செய்து வந்தனர். இது நாட்டின் பொருளாதார நிலையால் ஏற்பட்ட சங்கடம். இன்றுகூட சில பட்டதாரிகளுக்கு அதுபோன்ற ஒரு நிலை இருக்கத்தான் செய்கிறது.

IV. வேலை

Pagination

  • First page
  • Previous page
  • …
  • Page 40
  • Page 41
  • Page 42
  • Page 43
  • Page 44
  • Page 45
  • Page 46
  • Page 47
  • Page 48
  • …
  • Next page
  • Last page
RSS feed
Powered by Drupal