Skip to main content
Karmayogi

Main navigation

  • Home
User account menu
  • Log in

II. அன்னையும் வழிபாடுகளும்

30. அன்னையின் தரிசனம்

அன்னையின் வாழ்நாட்களில் அவர்களை நேரில் தரிசித்தவர்கள் தாங்கள் அன்னை தரிசனம் செய்ததாகக் கூறுவார்கள். பூதவுடலில் அன்னையைத் தரிசிப்பது பாக்கியம்; பூர்வ ஜன்மப் புண்ணியம். அன்னையின் தரிசனம் அத்துடன் நின்றுவிடவில்லை. அதைப் பல ரூபங்களில் காணலாம். ரூபத்திற்கேற்ப அம்சங்கள் உண்டு. என்றாலும், எந்த வகையில் அன்னையைக் கண்டாலும் அதுவும் பூரண தரிசனமே.

பொருள் ரூபாயாக இருக்கிறது. வெள்ளி ரூபாயாக உள்ள மரியாதை நோட்டிற்கு வெகுநாள் வரை வரவில்லை.

29. அன்னை அருளின் சிறப்பு

வாழ்க்கையில் உள்ளவர்களுடைய தொழில் அன்னையின் அருளால் பெருகுவதைப் பற்றி அடிக்கடி நான் பேசுவதுண்டு.

28. அன்னை காப்பாற்றும் விதம்

ஒரு 15 வயதுப் பையன் டேப்ரெக்கார்டரில் ஒரு டிரான்ஸ்பார்மரை இணைத்துப் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான். மேஜை மேலிருந்தவற்றை எடுத்து வேறு மேஜைக்கு மாற்ற ரெக்கார்டரை ஒரு கையிலும், டிரான்ஸ்பார்மரை ஒரு கையிலும் எடுத்தான். டிரான்ஸ்பார்மர் ஒரு ஷாக் கொடுத்ததுடன் அவன் உள்ளங்கையில் ஒட்டிக் கொண்டது. ‘வீல்’ என்று குரல் எழுப்பினான். ‘விபத்து மின்சாரத்தால்’ என்று தெரிந்து, மெயின் ஸ்விட்சை நிறுத்தினால்தான் பையன் உயிர் பிழைக்க முடியும். விஷயம் புரிவதற்குள் ஆபத்து முற்றி விடும் நிலை. பையன் இருந்த இடம் ஆசிரமத்துக்குச் சொந்தமான விருந்தினர் விடுதியானதால் மெயின் ஸ்விட்ச் சற்று தள்ளி இருந்தது.

27. அன்னையிடம் இருந்த தாவர விலங்கு உறவு

அன்னைக்கு, விலங்குகளுடைய உணர்ச்சி அது அவரிடம் நேரில் பேசுவது போலத் தெளிவாகத் தெரியும். மரங்களுடன் அன்னை பேசுவதுண்டு. ஜடப்பொருட்களான கட்டை, மரம், இரும்பு, போன்றவற்றின் மீதும் அன்னைக்கு அன்புண்டு. அந்த அன்பின் காரணமாக அன்னை அவற்றுடன் ஜீவனுள்ள தொடர்பு கொள்வது வழக்கம்.

26. மனித வாழ்விலிருந்து அன்னையின் வாழ்வுக்கு மாறுதல்

அன்னை ஒளி மயமானவர்கள். அன்னையின் தலையில் வட்டமான வெண் ஒளி கிரீடம் வைத்தாற் போலவும், 12 பந்துகள் தன் மேல் பொருத்தப்பட்டுள்ளது போலவும் உள்ளது. மனித வாழ்வு ஆசைகளாலும், பொய்மையாலும், இருளாலும் சூழப்பட்டது. ஒளிமயமான யோக வாழ்க்கையை அன்னை மனிதனுக்கு வழங்குகிறார். அதை ஏற்று அவ்வாழ்வின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே ஒருபடி எடுத்து வைக்கும் அன்பர்கள் பலர். அவர்களுக்கான முறைகள் எல்லாம் யோக முறைகள்.

25. அன்னையைப் பூரணமாகச் செயல்பட வைப்பது எப்படி?

மனிதனுக்கு அறிவு, உணர்வு என்ற இரண்டு பெரிய அம்சங்கள் உள்ளன. உணர்வை விட அறிவு சிறந்தது. மனத்தில் எழுவது அறிவு. மனத்தையுடைவன் என்பதாலேயே ‘மனிதன்’ என்று அவன் பெயர் பெற்றான். இருந்தாலும், அறிவுக்குப் பிரகாசம் உண்டு; தெளிவுண்டு. ஆனால் செயலாற்றும் திறனில்லை. செயலாற்றும் திறன் உணர்ச்சிக்கேயுண்டு. அறிவால் மனிதன் அன்னையை நம்பலாம். நம்பிக்கையின் உறைவிடம் அறிவு. அந்த நம்பிக்கை, வாழ்க்கையை நன்கு நடத்திச் செல்லும். அறிவின் திறன் வழிகாட்டுவது. அதன் உதவி மனிதனுக்கு அவசியம்.

24. அன்னையை ஆழ்ந்து ஏற்றுக் கொளல்

அன்னை தெய்வம். தெய்வத்தை நாம் வணங்குகிறோம். கஷ்டம் வந்தால் பிரார்த்தனை செய்கிறோம். அன்னையின் தெய்விகத்தை அறிந்து போற்றுகிறோம். சாமான்ய மனிதனாக வந்து அன்னையைத் தெரிந்துகொண்டு, ஓரளவு அன்னையை ஏற்றுக்கொண்டு, பல வகைகளில் அன்னையிடம் தொடர்புகொண்டு, அவர்களது அவதாரச் சிறப்பை அறியும் பொழுது, அவர்களது இலட்சியத்தின் தன்மையைக் கண்டு கொள்ளும்பொழுது சிலருக்குத் தம்மைப் பூரணமாக அன்னைக்கு அர்ப்பணிக்கத் தோன்றும். அப்படிப்பட்டவர்கள் சாதகர்களாவதுண்டு. அந்நிலையை அடைய முதற்படி என்ன? ‘அன்னையைப் பூரணமாக நான் உணர்ந்துவிட்டேன். இனி அன்னைக்கே நான் உள்ளும் புறமும் அர்ப்பணமானவன்.

23. அன்னையும் தீர்க்க முடியாத பிரச்சனைகளும்

எல்லாப் பிரச்சனைகளும் தீர்க்கக் கூடியவையே. ‘பிரச்சனை என்று ஒன்று இல்லை’ என்பது உண்மையானாலும், தீராது இருக்கும் பிரச்சனைகளும் நம் கண் முன் இருக்கின்றன. ‘பிரச்சனைகள் எப்படி உருவாகின்றன?’ எப்படித் தீர்வு காண்கிறோம்? எந்த வகையில் தீராத நிலை ஏற்படுகிறது? என்ற விளக்கங்களையெல்லாம் இங்கு கருதாது, அவற்றைத் தீர்க்க உள்ள இரு வழிகளை மட்டும் சுருக்கமாக எழுதுகின்றேன்.

22. வாழ்க்கையில் அன்னையை ஏற்றுக் கொள்ளுதல்

‘அன்னையைத் தெய்வமாக ஏற்றுக் கொள்ளுதல்’ என்பது, அன்னையின் தெய்வ அம்சத்தை உணருதலாகும். ‘அன்னையை வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ளுதல்’ என்பது, முற்றிலும் வேறுபட்ட ஒன்றாகும். ‘பொய் சொல்லாமல் இருப்பது உயர்ந்தது’ என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்ளலாம். அது அறிவால் அக்கருத்தைப் புரிந்து கொண்டதாக அர்த்தம். அந்த இலட்சியத்தை வாழ்க்கையில் எத்தனை பேரால் ஏற்றுக் கொள்ள முடியும்? இங்கும் அது போன்ற ஒரு வித்தியாசம் உண்டு.

Pagination

  • First page
  • Previous page
  • …
  • Page 112
  • Page 113
  • Page 114
  • Page 115
  • Page 116
  • Page 117
  • Page 118
  • Page 119
  • Page 120
  • …
  • Next page
  • Last page
RSS feed
Powered by Drupal