Skip to main content
Karmayogi

Main navigation

  • Home
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home
  2. அன்னையின் வரலாறும், வழிபாடுகளும்

25. அன்னையைப் பூரணமாகச் செயல்பட வைப்பது எப்படி?

மனிதனுக்கு அறிவு, உணர்வு என்ற இரண்டு பெரிய அம்சங்கள் உள்ளன. உணர்வை விட அறிவு சிறந்தது. மனத்தில் எழுவது அறிவு. மனத்தையுடைவன் என்பதாலேயே ‘மனிதன்’ என்று அவன் பெயர் பெற்றான். இருந்தாலும், அறிவுக்குப் பிரகாசம் உண்டு; தெளிவுண்டு. ஆனால் செயலாற்றும் திறனில்லை. செயலாற்றும் திறன் உணர்ச்சிக்கேயுண்டு. அறிவால் மனிதன் அன்னையை நம்பலாம். நம்பிக்கையின் உறைவிடம் அறிவு. அந்த நம்பிக்கை, வாழ்க்கையை நன்கு நடத்திச் செல்லும். அறிவின் திறன் வழிகாட்டுவது. அதன் உதவி மனிதனுக்கு அவசியம்.

‘உடனே செயல்பட வேண்டும். பூரணமாகச் செயல்பட வேண்டும். காரியங்கள் நடைபெற வேண்டும்’ என்றால், அதற்கு அறிவு நேரடியாகப் பயன்படாது. அதற்கான கருவி உணர்ச்சியே. உணர்வால் நெகிழ்ந்தால், உணர்ச்சிப் பெருக்கால் அன்னையை நாடி நம் குறைகளைக் கூறினால், நம்முள் உணர்ச்சி பெருகி நாம் தன் நிலையிழந்து, உணர்ச்சி வடிவமாகி உருகிக் கரைந்தால், பிரார்த்தனை உடனே பூர்த்தி பெறும்.

உணர்ச்சி பெருகுவதை இரு நிலைகளில் காணலாம். நம் நிலையைக் கண்டு, பரிதாபப்பட்டு, பயந்து பெருகும் உணர்ச்சி; பிரார்த்திப்பவரின் துன்ப நிலையை உணர்த்தும் உணர்ச்சி.

அதுபோல் அவல நிலையைத் தெரிந்து அதனால் உணர்ச்சி மயமாகும் நிலையில், அதுவே அன்னையின்பால் நெகிழ்ந்த பக்தியைக் கொடுத்து நம்மை மறக்கச் செய்து நம் பிரச்சனையையும் மறக்கச் செய்து, அன்னையின் மீதுள்ள பக்தியால் நிரம்பி, பரவசப்பட்டுத் தன் நிலை இழப்பதும் உணர்ச்சியே.

இந்த இருவகை உணர்ச்சிகளும் அன்னையை உடனே செயல்படச் செய்யும். முதல் வகை பிரச்சனையைத் தீர்க்கும். மற்றது பிரச்சனை தீர்வதன் மூலம் நம்முள் பக்தியை வளர்க்கும்.

**********

Book traversal links for 25. அன்னையைப் பூரணமாகச் செயல்பட வைப்பது எப்படி?

  • 24. அன்னையை ஆழ்ந்து ஏற்றுக் கொளல்
  • Up
  • 26. மனித வாழ்விலிருந்து அன்னையின் வாழ்வுக்கு மாறுதல்

Book navigation

  • 01. அன்னையின் வரலாறும், வழிபாடுகளும்
  • 02. ஸ்ரீ அரவிந்தரின் வாழ்க்கையும் வரலாறும்
  • 03. ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம்
  • 04. ஆரோவில் நகரம்
  • 05. ஸ்ரீ அரவிந்தர் — அன்னையின் பூரண யோகம்
  • 06. மரபில் வந்த யோகப் பாதைகளும், பூரண யோகமும்
  • 07. உடல் நலம், நோய், உடலின் தன்மை
  • 08. பணம், செல்வம்
  • 09. பழக்கம்
  • 10. கல்வி
  • 11. உலக நாடுகளைப் பற்றி அன்னை
  • 12. அன்பர்கள் வாழ்வில் அன்னையின் அருட்பார்வை
  • 13. அன்னையின் தனிப்பெரும் சிறப்பு
  • 14. இந்தியா
  • 15. அன்னையின் தாய்மை
  • 16. இயற்கை
  • 17. தெய்வங்கள்
  • 18. திருவுருமாற்றம்
  • 19. எங்கும் அன்னை இருக்கின்றார்
  • 20. எதிலும் சம்பந்தப்படாத செய்திகள்
  • 21. அற்புதங்கள் அன்றாட நிகழ்ச்சிகளாகின்றன
  • 22. வாழ்க்கையில் அன்னையை ஏற்றுக் கொள்ளுதல்
  • 23. அன்னையும் தீர்க்க முடியாத பிரச்சனைகளும்
  • 24. அன்னையை ஆழ்ந்து ஏற்றுக் கொளல்
  • 25. அன்னையைப் பூரணமாகச் செயல்பட வைப்பது எப்படி?
  • 26. மனித வாழ்விலிருந்து அன்னையின் வாழ்வுக்கு மாறுதல்
  • 27. அன்னையிடம் இருந்த தாவர விலங்கு உறவு
  • 28. அன்னை காப்பாற்றும் விதம்
  • 29. அன்னை அருளின் சிறப்பு
  • 30. அன்னையின் தரிசனம்
  • II. அன்னையும் வழிபாடுகளும்
  • பொருளடக்கம்
RSS feed
Powered by Drupal