Skip to main content
Karmayogi

Main navigation

  • Home
User account menu
  • Log in

11. உலக நாடுகளைப் பற்றி அன்னை

‘‘ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தனிச்சிறப்புண்டு. பிரான்சின் சிறப்பு தெளிந்த அறிவுள்ள மனம்; ஜெர்மனியின் தனித்தன்மை புதிய விஷயங்களைக் கண்டு பிடிப்பதில் தெரிகிறது; அமெரிக்கர்கள் காரியங்களை முறைப்படுத்தித் திறமையாக செயலாற்றுவதில் சிறந்துள்ளார்கள்; ஜப்பான் (Honour) மானத்தைப் பெரிதாகக் கருதும் நாடு; இந்தியா உலகின் குருவாகும் ஆத்மீகப் பெருமையுள்ள புண்ணிய பூமி’’ என்பார் அன்னை. அவர் மேலும் சொல்வார்: ‘அமெரிக்கர்களை விட ரஷ்யர்கள் உண்மையான மனத்துடன் (sincere) இருக்கிறார்கள்.’’

**********

10. கல்வி

கல்வியைப் பற்றிய அன்னையின் கருத்துகளும், ஸ்ரீ அரவிந்தரின் கருத்துகளும் புரட்சிகரமானவை. அவர் நிறுவிய ஆசிரமப் பள்ளி ஒரு வகையில் இந்தியாவிலேயே தலைசிறந்த பள்ளியாகவும், உலகத்தில் எங்கும் இது போன்ற பள்ளி இல்லை எனக் கருதும் வகையிலும் உள்ளது. ஜவஹர்லால் நேரு அப்பள்ளிக்கு வந்த பொழுது மிகவும் சந்தோஷப்பட்டார். அடுத்த முறை நேரு புதுவைக்கு வந்த பொழுது, ‘‘ஆசிரமப் பள்ளிக்கு எப்பொழுது போகலாம்?’’ எனக் கேட்டார். அவர் அங்கு செல்லும் ஏற்பாடு இல்லை. உடனே திட்டங்களை மாற்றி நேருவை ஆசிரமப் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.

09. பழக்கம்

‘வாழ்க்கை ஒரு போராட்டம்’ என்பதை எல்லோரும் அறிவார்கள். வாழ்க்கை அப்படியேதான் அமைந்துள்ளது. அதற்குக் காரணம் உண்டு. ‘ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்’ என்று ஒரு மொழி. இருவருக்கும் திருப்தியாகச் செயல்பட முடியாத ஒரு நிலை அது. வாழ்க்கையில் 10 விளக்கு அணைந்தால் தான் ஒரு விளக்குப் பிரகாசமாக எரியும். வாழ்க்கையின் அமைப்பு ஒன்றைக் குறைத்து மற்றதை நிறைவு செய்யும்படி அமைந்துள்ளதற்குக் காரணம், அடிப்டை சுயநலமாக இருப்பதால்தான். அன்னை ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காணும் பொழுது, பெரும்பாலும், இரு தரத்தாருக்கும் சௌகரியமாகவே தீர்வு காண்பது வழக்கம்.

08. பணம், செல்வம்

ஸ்ரீ அரவிந்தர் மூன்று விஷயங்களை முக்கியமாகக் கருதினார். ‘‘உலகத்தில் பொய் ஒழிந்து மெய் ஆட்சி செலுத்த மூன்று விஷயங்கள் பொய்யிலிருந்து விடுபட்டு, மெய்யின் ஆதிக்கத்திற்குள் வரவேண்டும். அவை, தேக ஆரோக்கியம், செல்வம், அரசு ஆகியன. உடல் நலம் என்பதை நாம் பேண விரும்பினால், நல்ல அளவுக்கு ஆரோக்கியத்தைப் பெறலாம். அந்த அம்சத்தைப் பூர்த்தி செய்வது முடியக்கூடிய ஒரு காரியம். அரசு, மெய்யின் ஆதிக்கத்திற்குள் வர வேண்டுமானால் மெய்யைத் தன் யோக சித்தியின் மூலம் முழுமையாக அடைந்தவனே அரசின் தலைவனாக வர வேண்டும்.

07. உடல் நலம், நோய், உடலின் தன்மை

உடல் நோயுற்றபோது அவ்வுடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்கிறது. ‘உடல் தன்னைக் குணப்படுத்திக் கொள்ள முடிவு செய்யும்வரை நோய் தீராது’ என ஸ்ரீ அரவிந்தர் சொல்லியிருக்கிறார். டாக்டர்கள் நம்மை வியாதியிலிருந்து குணப்படுத்துவதற்கு முக்கியமான காரணம் அவர்கள் மீது நமக்குள்ள நம்பிக்கையே. சிலருக்கு, ‘தன்னுடைய வியாதி தீராது’ என்ற நம்பிக்கையிருப்பதுண்டு. அவர்களை அன்னை குணப்படுத்த முயன்றால் அவருடைய சக்தி திறனை இழந்து நிற்கும். வியாதியஸ்தனுடைய நம்பிக்கைக்கு வலுவுண்டு. அது பேரருளுடைய ஆற்றலையும் சிதைத்துவிடக் கூடியது.

06. மரபில் வந்த யோகப் பாதைகளும், பூரண யோகமும்

மோட்சத்தை நாடித் தவம் செய்து, தவம் பலித்தால் மோட்சத்தை அடைவது யோக இலட்சியம். பூரண யோகத்தை, சரணாகதியை இலட்சியமாகக் கொண்டு வாழ்க்கையை யோகமாக மாற்றி வாழும் பொழுது முதற்கட்டமாக மோட்சம் சித்திக்கும். அதை ஏற்றுக்கொண்டு மோட்ச லோகத்திற்குப் போகாமல், தன் அடிப்படையில் பூரண யோக இலட்சியமான மரணத்தை வெல்லும் பாதையில் போக வேண்டும்.

05. ஸ்ரீ அரவிந்தர் — அன்னையின் பூரண யோகம்

பூரண யோகத்தின் அடிப்படையைச் சுருக்கமாக அன்னை, ஸ்ரீ அரவிந்தர் பற்றிய பகுதிகளில் சொல்லியாகி விட்டபடியால் இங்கே ஒரு நீண்ட விளக்கம் தேவை இல்லை. அன்னை, ஸ்ரீ அரவிந்தர் வாழ்க்கையிலும் அவர்கள் சொல்லிய விஷயங்களிலும் பூரண யோகம் சம்பந்தமான சில முக்கிய நிகழ்ச்சிகளையும் உண்மைகளையும் மட்டும் கீழே தருகிறேன். பல கோணங்களிலிருந்து பார்த்த பல விஷயங்களைப் பற்றி அவர்கள் அவ்வப்போது சொல்லிய விஷயங்கள் அவை.

04. ஆரோவில் நகரம்

‘Sri Aurobindo’ என்ற பெயரில் உள்ள Auro என்ற பகுதியையும் ‘நகர்’ என்று பொருள்படும் ‘Ville’ என்ற பிரெஞ்சுச் சொல்லையும் சேர்த்து இந்த உலகப் பொதுநகருக்கு ‘ஆரோவில்’ என்று பெயரிடப்பட்டது. அதற்கு ‘ஸ்ரீ அரவிந்தர் நகரம்’ என்ற கருத்தில் அப்பெயர் சூட்டப்பட்டது.

03. ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம்

‘ஆசிரமம்’ என்பது ஒரு குருவைச் சுற்றி ஏற்படும் ஸ்தாபனம். அவரது கொள்கைகளைப் பரப்பவும், அவரது பணிகளை அவருக்குப் பின் தொடர்ந்து செய்யவும், அவரால் ஓர் இயக்கம் ஸ்தாபிக்கப்பட்டால், அதை நாடெங்கும் கொண்டு செல்வதே அவர் பெயரால் ஏற்படும் ஆசிரமத்தின் கடமைகளாகும்.

065. No Industry in India Need Fail

India is a growing market in the sense people want more, want the minimum standards of life. He who wants more announces that he is willing to work for more. Prosperity is willingness to work for more. Work yields results when it is organised. Organised work can be honest or otherwise. No company which is willing to organise its work to express values need fail in India today.

Pagination

  • First page
  • Previous page
  • …
  • Page 114
  • Page 115
  • Page 116
  • Page 117
  • Page 118
  • Page 119
  • Page 120
  • Page 121
  • Page 122
  • …
  • Next page
  • Last page
RSS feed
Powered by Drupal