The Divine choosing to act on its own initiative is known as grace. Pity is the response of a person to another's suffering more because he is unable to stand the sight of suffering than for the sake of the sufferer. Sympathy is the feeling one has at the sight of another suffering more for the object of suffering. The word 'sympathy' itself means to have the same (sym) feeling (pathy). This is a response of strong nerves to a victim of cruelty or suffering. Pity makes the individual who feels it miserable and helpless. He will not be able to relieve the sufferer.
People are of different types and many levels. Mother exists at all levels of creation and expresses herself in all types. Prayer means the human soul turning to the Divine soul seeking a relationship. Such a turning is called aspiration. When the individual soul seeks an eternal relationship with the Divine soul, the Mother of souls plays an intermediary role to make that relationship initially possible and consummates it in all its possibilities. This call from below and the answer from above find expression in the field of life and lose their character of call and answer.
In areas where people have energy, training, good upbringing, skill, capacity and a fairly long tradition of having functioned successfully at a certain level, they rarely face problems. In such areas not only do they have experience in using the materials available for a certain accomplishment, they also have the capacity to manage when resources fall short. A member of an agricultural family comes into that category when he has to cultivate, a child of a professor in the field of education, a Chettiar youth with limited means in a trade.
இந்தியா ஒரு பின்தங்கிய நாடு என்று உலகமும், இந்தியர்களும் அறிவார்கள். உலகத்திற்கு வழிகாட்டும் தகுதிக்கும், இந்தியா இன்றுள்ள நிலைக்கும் உள்ள தூரம் அதிகம். ஐ.நா. சபையில் 5 வல்லரசுகள், சம அந்தஸ்துடன் இருந்தாலும், உலகத்தின் தலைமைப் பதவியை அமெரிக்காவுக்கே அனைவரும் நடைமுறையில் அளித்துள்ளனர். இன்று நாம் சென்னையில் நாகரீகம் - Fashion- என்று காண்பது சில ஆண்டுகளுக்குமுன் அமெரிக்காவில் ஆரம்பித்தது. அமெரிக்காவில் உள்ள பல கம்பெனிகளில் வரவு, செலவு இந்திய மத்திய சர்க்காரின் வரவு செலவைப்போல் இரு மடங்கு, மும்மடங்குள்ளன.
அன்னையை வழிபடச் சிறந்த முறையாக நினைவே வழிபாடு என்று நான் சொல்வதுண்டு. மனத்தூய்மையும், பக்குவமே அடிப்படை நிபந்தனைகள் என்பதால், நினைவு தூய்மையைச் சிறப்பாக்குகிறது. நெஞ்சம் தியானத்தில் நிறைவதுபோல் நிறைகிறது. வழிபாட்டின் குறிக்கோள் அளவுகடந்து பூர்த்தியாகிறது.
பிரார்த்தனை என்பது தெய்வீகம் பொருந்தியது. மனித உழைப்பைப் போற்றாதவர் இல்லை. நட்பில் விஸ்வாசத்தைப் பாராட்டாதவரில்லை. உயர்ந்த ஞாபகசக்தியை அனைவரும் கண்டு வியப்படைவார்கள். உழைப்பு உடலின் முயற்சி; விஸ்வாசம் உணர்வின் நெறி; ஞாபகம் அறிவின் முயற்சி; இவற்றையெல்லாம் கடந்த நிலையிலுள்ளது ஆன்மா. ஆன்மா முயன்று எழுப்பும் குரல் பிரார்த்தனை. இது ஆண்டவனை எட்டும். எட்டிய க்ஷணம் அற்புதம் நிகழும். இடைவிடாத பிரார்த்தனை இறைவன் காதில் தவறாது விழும். மனித வாழ்விலுள்ள எந்தச் சிக்கலையும் அவிழ்க்கும் திறனுடையது இடையறாத பிரார்த்தனை.
மனிதனுக்குப் பல்வேறு திறமைகளுண்டு. பொதுவாக ஒருவருக்கு எல்லாத் திறமைகளும் அமைவதில்லை. ஏதாவது ஒன்று இருப்பதே பெரிய காரியம். ஒன்றுக்கு மேற்பட்ட திறமை ஒருவருக்கு அமைவது அபூர்வம். அப்படியிருந்தால் அவர்கள் அதிகமான உயர்வைப் பெறுவார்கள். உலகப் புகழ்பெற்ற பெரியவர்களைத் தவிர்த்து, வாழ்க்கையில் சிறப்புப்பெற்ற எவரையும் கவனித்தால், பெரும்பாலும் அவர்களிடம் ஒரு திறமையே சிறந்து இருப்பது வழக்கம். அது திறமையாகவும் இருக்கும்; சிறந்த குணம், உயர்ந்த பண்பாகவும் இருப்பது வழக்கம்.
இதுவரை உலகத்தில் அவதாரப் புருஷர்கள் ஒவ்வொருவராக வந்திருக்கின்றனர். இரு அவதாரப் புருஷர்கள் ஒரே சமயத்தில் வந்தது இல்லை. முதன்முதலாக அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் ஒரே சமயத்தில் அவதரித்தார்கள். மேலும் அவர்கள் இணைந்து செயல்பட்டனர். உலக சரித்திரத்தில் இது ஒரு மாற்றம், புதுமை, உயர்வு. வேத காலத்திலிருந்து, உபநிஷதம், கீதை ஏற்பட்ட நாளிலிருந்து, இராமகிருஷ்ண பரமஹம்ஸர், இராமலிங்க சுவாமி நாள்வரை யோக விஷயங்கள் விளக்கமாக எழுத்தப்படவில்லை.
உயர்ந்த குணமுடையவனை உயர்ந்தவன் என்கிறோம். உயர்ந்த குணம் உடையவர் பலர் இருப்பதால்தான் உலகம் இருக்கிறது. இல்லை எனில், உலகம் இயங்காது, காட்டு மனிதனுடைய வாழ்வாக மக்கள் சமுதாயம் மாறிவிடும். பரம்பொருளை எல்லாக் குணங்களையுமுடையவன் என்றும், எந்தக் குணமுமில்லாதவன் என்றும், குணங்களைக் கடந்தவனென்றும் விவரிப்பதுண்டு. அறிவுக்கும், குணத்திற்கும் வேறுபாடுண்டு. நடத்தை, மனப்பான்மை, சுபாவம் என்ற மற்றவைகளுமுண்டு.