Skip to main content
Karmayogi

Main navigation

  • Home
User account menu
  • Log in

முன்னுரை

இந்தியப் பரம்பரையின் சிகரமாக விளங்குவது சநாதன தர்மம். அதாவது, எல்லாத் தத்துவங்களையும், தர்மங்களையும் தன்னுள் அடக்கியது. எந்தத் தெய்வத்தை மனிதன் வணங்கினாலும் அவன் வழிபாட்டை ஏற்றுக்கொள்வது அதற்குப் பின்னணியாகவுள்ள பரம்பொருளேயாகும். அப்பரம்பொருளே வாழ்வு. அதுவே உலகம். அதுவே அனைத்துமாம்.

14. அன்னைக்கு சேவை செய்ய உதவும் மனப்பக்குவங்கள்

  1. நம் கையால் செய்யும் காரியங்கள் பூரணம் பெற வேண்டும். முழுமையான நாணயம்.  
     
  2. மனித உறவுகள் அனைத்தும் இனிமையாகவும், இசைவாகவும் இருக்க வேண்டும்.  
     
  3. காரியங்களில் குறையிருந்தால், ‘நமக்கு மட்டுமே பொறுப்பு' என்ற மனநிலை வேண்டும்.  
     
  4. மற்றவர் குறைகளுக்கு நாம் பொறுப்பெடுத்துக்கொள்ளும் தெளிவு வேண்டும்.  
     
  5. அதிகப்பட்ச அறிவுடன் செய்யும் காரியங்களில் 100% அறியாமை கலந்திருப்பது தெரிய வேண்டும்.  

13. அன்னையின் யோகானுபவங்களில் இருந்து திரட்டிய கருத்துகள்

தாமிருந்தவரை தம் யோகானுபவங்களில் ஒரு சிலவற்றையே அன்னை வெளியிட்டார். மற்றவை அவர் சமாதியடைந்த பிறகே வெளியிடப்பட்டன. தம் இளவயது வாழ்க்கையைப் பற்றி அன்னை அக்கரை காட்டியதில்லை. அவை பூதவுடலின் வாழ்வானதால் புறக்கணிக்கப்பட வேண்டியவை என்று கூறியிருக்கின்றார். என்றாலும், அக்கால வாழ்வில் நடந்த சில சம்பவங்களையும் வெளியிட்டுள்ளார். பொதுவாகப் பக்தர்களுக்குப் பயன்படும் நிகழ்ச்சிகளை அன்னையின் எழுத்திலிருந்து திரட்டி, ‘அன்னையின் வரலாறும் வழிபாடும்’ என்ற புத்தகத்தில் கொஞ்ச நாள் முன்னதாக வெளியிட்டேன்.

12. வாழ்வின் பொது உண்மைகள் – II

குடும்பம் ஏற்பட்டு, குழந்தைகள் பெற்று, தொழிலை செவ்வனே நடத்துவதற்கு உதவியாக இருக்க வேண்டும் என்று திருமணம் என்ற ஏற்பாட்டைச் சமூகம் செய்தது. திருமணம் என்ற ஒன்று இல்லாத காலத்து மனிதன் விலங்கு போலிருந்தான். விவசாயம் செய்யவும், வியாபாரம் செய்யவும் வீடு ஒன்று தேவை. வீடு நிலையாக, அழகாக, இலட்சணமாக இருக்க, வீட்டை இலட்சியமாக்குதல் அவசியம். அதை நிறைவேற்றுவது திருமணம். திருமணத்தின் அம்சங்கள் மக்கட்பேறு, முறையான தொழில், இலட்சியக் குடும்பம், இவையெல்லாம் ஏற்படும் பொழுது திருமண வாழ்க்கை இனிமையாகவும் இருப்பதுண்டு. இனிமையாகவே இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமில்லை.

11. வாழ்வின் பொது உண்மைகள் – I

மனத்தையும், ஜடத்தையும் விலக்கினால் மீதியுள்ளவை அனைத்தும் வாழ்வு (life) என்ற தலைப்பில் வரும். நாம் அறிந்தது குடும்ப வாழ்வு, சமூக வாழ்வு, உலக வாழ்வு ஆகும். குடும்பம் சமூகத்திலிருந்து ஓரளவு மாறுபடுவதை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம். அதே போல் சமூக வாழ்வு உலக வாழ்வில் ஒரு பகுதி என்பதும் தெளிவு. சமூகம் என்பது நாகரீகமடைந்த மனிதனை மட்டும் சொல்கிறது. அதைத் தாண்டிய மனிதர் ஓரளவும், மற்ற ஜீவராசிகள் ஏராளமாகவும் இருக்கிறார்கள். வாழ்வு எனப்படுவதன் பகுதிகள் இவை. மனிதன் ஏற்படுவதன் முன் ஏற்பட்டது வாழ்வு. வாழ்வின் உண்மைகள் என்று நான் குறிப்பிடுவது எல்லா நாட்டிற்கும் பொருந்தும்; எல்லா காலத்திற்கும் பொது.

10. அடுத்த கட்டம் – II

  1. வாழ்வின் நியதிகள் (சட்டங்கள்) செயல்படும் விதத்தையும், எங்கு அவை முடிவடைகின்றன, அருள் எங்கு ஆரம்பிக்கின்றது என்பதையும் நாம் கண்டுகொள்ள வேண்டும். யோகத்திற்கும், யோக வாழ்க்கைக்கும் உரிய கட்டங்கள் அவை.

    ஒரு சிறுவனை ஒரு போக்கிரி மிரட்டினால், அதைப் பார்த்துக் கொண்டு ‘நமக்கென்ன’ என்று போவதுண்டு. சட்டப்படி அவர்கள் செய்வது தவறில்லை. ஆனால் சிறுவனுக்கு உதவ முன்வருபவர்கள் சட்டப்படி செயல்படவில்லை; கருணையால், மனிதாபிமானத்தால் செயல்படுகிறார்கள்.

09. அடுத்த கட்டம் – I

  • “நான் அன்னையை ஏற்றுக்கொண்டதிலிருந்து ஏராளமான நல்லவை நடக்கின்றன”.
  • “என் வாழ்வை அன்னை மாற்றியமைத்ததற்கு நன்றி சொல்ல வார்த்தைகளில்லை”.
  • “அன்னை என் வாழ்வில் அற்புதங்களை நிகழ்த்துகிறார்”.
  • “அன்னை என்றால் நிதர்சனமான தெய்வம்”.
  • “அம்மா எதையும் க்ஷணத்தில் முடிக்கின்றார்”.
  • “நினைத்தாலே உடல் கூசுகிறது”.
  • “இனி அன்னையில்லாமல் நானில்லை”.
  • “இன்று நானும் ஒரு மனிதனாக உலவுகிறேன் என்றால், அது அன்னையால்தான்”.
  • “எதுவும் முடியும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது”.
  • “மனதிற்குப் புதிய தெம்பும், சந்தோஷமும் வந்துவிட்டன”. 

உண்மையான பக்தி,

08. நூற்றாண்டு வெளியீடு

1920இல் பகவான் ஸ்ரீ அரவிந்தர் எழுதிய பெரிய நூல்களை 1933இல்தான் முதன்முதலாக வெளியிட்டார்கள். 1950இல் ஆசிரமமே அந்நூல்களை வெளியிட முனைந்தது. 1972இல் அவருடைய நூற்றாண்டில் அவர் இதுவரை எழுதிய அனைத்தையும் சேர்த்து 30 வால்யூம்களாக வெளியிட்டார்கள். அதனினும் பெரிய விசேஷம், அவற்றுக்கு indexஆக ஒரு வால்யூம் வெளிவந்தது. இன்றுவரை தனிப் புத்தகங்களுக்கு index கிடையாது.

07. Synthesis of Yoga - சின்த்தஸிஸ் ஆப் யோகா

யோகங்களின் சாரம் என்ற பொருள்படும் இத்தலைப்பு பகவான் ஸ்ரீ அரவிந்தர் எழுதிய யோக நூலின் பெயர். அவருடைய 30 வால்யூம்களில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட நூல்கள் உள்ளன. அவற்றுள் தலையாய மூன்றில் இந்நூல் ஒன்று.

06. லைப் டிவைன்

பூரண யோகத்தின் தத்துவத்தை விளக்கி பகவான் ஸ்ரீ அரவிந்தர் Life Divine என்ற நூலை எழுதினார். Life Divine என்றால் தெய்வீக வாழ்வு என்று பொருள். வாழ்வை நீத்து தெய்வத்தைத் தேடும் மரபே நம் நாட்டு பழம்பெரும் மரபு. அதற்கு நேர் எதிரான கொள்கையை அடிப்படையாகக் கொண்டு தெய்வீக வாழ்வு என்ற பொருள்படும்படி இந்நூல் அமைகிறது.

Pagination

  • First page
  • Previous page
  • …
  • Page 75
  • Page 76
  • Page 77
  • Page 78
  • Page 79
  • Page 80
  • Page 81
  • Page 82
  • Page 83
  • …
  • Next page
  • Last page
RSS feed
Powered by Drupal