Skip to main content
Karmayogi

Main navigation

  • Home
User account menu
  • Log in

Introduction

What is the Spirit in Life?

Spirituality is related to other life or moksha, not to Prosperity. The idea that Spirit can play a role in life and bring in Prosperity is alien to our tradition, Indian or Hindu. People in domestic life are wary of yoga, Spirit, etc., as they smack of sannyasa. This is meticulously shunned and children are taught accordingly. They are right.

Acknowledgement by the Author

The hundred articles in this book have been previously published in the New Indian Express from 15th July 2003 to 10th November 2003. I would like to thank Mr. M.K. Sonthalia, Managing Editor of New Indian Express for granting me permission to reprint the articles in this collection.

Spirituality and Prosperity III

CONTENTS

23. தடுத்தாட்கொள்ளுதல்

ஆன்மிகப் பெருவாழ்வு விதிக்கப்பட்ட பெருமக்கள் வாழ்வில் இறைவன் குறுக்கிட்டு அவர்களது இல்லறவாழ்வு முழுமை பெறாவண்ணம் தடுப்பதுண்டு. அதை தடுத்து இறைவன் பக்தனை ஆட்கொண்டார் என வழங்குகிறோம்.

22. எல்லைக்கோடு

வாழ்வு நாட்டுக்குரியது. யோகம் காட்டைச் சார்ந்தது. தவமும் யோகமும் வாழ்வின் எல்லைக்குப் புறம்பானவை. வாழ்வுக்குத் துக்கம் உண்டு. சுகவாழ்வில் பெறும் இன்பத்தைச் சிற்றின்பம் என்றும் தவத்தால் பெறும் இன்பத்தைப் பேரின்பம் என்றும் சொல்வோம். பேரின்பம் வாழ்விலில்லை. சிற்றின்பம் தவத்திற்கு விலக்கு. இதுவே இந்திய யோக மரபு.

21. ஆயிரத்தில் ஒருவர்

இதுவரை சொந்தக்கார ஏழைப் பெண்களை வீட்டிற்குக் கொண்டு வந்து கொஞ்சநாள் வைத்திருந்து கல்யாணம் பண்ணிய வகையில் 9 கல்யாணத்தை இவர் செய்திருக்கிறார் என்றால், யார் இவர்? இப்படிப்பட்டவரை நாம் கேள்விப்பட்டதில்லையே? ஆயிரத்தில் ஒருவராக இருக்கிறாரே என்று சொல்லுகிறோம்.

20. அறிவுடைமை

உடலுக்குத் தெரிய முடியாமல் கண்ணுக்குத் தெரியாத புத்திக்குப் புலப்படுவதை நம்பிச் செயல்பட்டுச் சாதிப்பவனை அறிவாளி என்கிறோம். அவனது திறமையை அறிவுடைமை எனக் குறிப்பிடுகிறோம். ஆங்கில இலக்கிய மேதை எழுதிய செய்யுளில் ஒரு கிராமத்துப் பாதிரியை விவரிக்கிறார். காலையில் சர்ச் பூஜை முடிந்தவுடன் பாதிரியார் வெளியே வருகிறார். கூட்டமாகப் பக்தர்கள் அவரைச் சூழ்ந்து கொள்கிறார்கள். ஒரு வியாபாரி சந்தை வரும் தேதியைக் கேட்கிறார். பாதிரியார் அந்தத் தேதியை நினைவிலிருந்து சொல்லியவுடன் கூட்டம் கலகலத்தது. எப்படி பாதிரியார் காலண்டரைப் பார்க்காமல், யாரையும் கலந்து ஆலோசிக்காமல் சொன்னார் என்று திகைக்கிறது.

19. சூட்சுமம்

புதிய தம்பதிகளுக்குள் சண்டை வந்து மனைவி தூக்கு மாட்டிக் கொள்ள முயன்றாள். கணவன் பதறிப் போய், பெரும் பாடுபட்டு, சமாதானம் செய்து சமாளித்தான். இனி சண்டையிடுவதில்லை என முடிவு செய்தான். கொஞ்சநாள் கழித்து சண்டை வந்தது. தூக்கு மேடையும் மீண்டும் வந்தது. கணவன் நிலையிழந்தான். அடிக்கடி இது போல் நடந்ததால் அவனுக்குப் பயித்தியம் பிடிக்கும் போலிருந்தது. நிரந்தரமாக tension படபடப்பேற்பட்டது. அடுத்தமுறை சண்டை வந்தபொழுது, அவள் தூக்கு மேடைக்கு தயாரானாள். அவன் தன்னையறியாமல் சத்தம் போட ஆரம்பித்தான் "நீ இறந்தால் எனக்கு நிம்மதி'' என்றான். ஒருவாறு சண்டை ஓய்ந்தது. அவனுக்கு படபடப்பு பதட்டம் போய் விட்டது.

18. கோபம்

ஸ்ரீ அரவிந்தர் கோபப்பட்டு நான் பார்த்ததேயில்லை. இருமுறை கோபம் வரும் போலிருந்தது, அதையும் அடக்கிக் கொண்டார்'' என்று அன்னை கூறுகிறார். பொதுவாக தபஸ் செய்பவர்களுக்கு அதிகக் கோபம் வரும். மனித சுபாவத்திலுள்ள கோபம் இயற்கையானது. அதை தவம் மூலம் வெளிப்படுவதைத் தடுத்தால் அதிகமாகும். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது பழமொழி. இயற்கையாக கோபம் தானே அழிவதில்லை. சிலருக்கு அதிகமாகவும், மற்றவருக்குக் குறைவாகவுமிருக்குமே தவிர, எவருக்கும் கோபமே வராது என்று சொல்ல முடியாது, கோபமே வரக்கூடாது என்றவுடன் நமக்கு தர்மபுத்திரரின் நினைவு வருகிறது. "எனக்குக் கோபம் வரும். நான் வெளியில் காண்பிப்பதில்லை.

17. தீராத பிரச்சினை தீர்க்க முடியாத பிரச்சினையல்ல

பூவுலக வாழ்வு சட்டத்திற்குட்பட்டது. அந்த ஒரு பெரிய சட்டம் பல சட்டங்களாகப் பிரிந்து வாழ்வின் பகுதிகளை நிர்ணயிக்கிறது. பிறந்தவன் இறப்பான், உடலுக்கு உணவு வேண்டும், தூக்கம் இன்றி வாழ்வு அமையாது, வலிமை எளிமையை ஆட்கொள்ளும், விழிப்பான மனிதனுக்கு விருதுண்டு போன்ற சட்டங்கள் அவை.

Pagination

  • First page
  • Previous page
  • …
  • Page 95
  • Page 96
  • Page 97
  • Page 98
  • Page 99
  • Page 100
  • Page 101
  • Page 102
  • Page 103
  • …
  • Next page
  • Last page
RSS feed
Powered by Drupal